close
Choose your channels

இந்திய திரையுலகில் யாரும் வாங்காத சம்பளமா? அட்லியை வளைத்து போட்ட அஜித் பட நிறுவனம்..!

Tuesday, May 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் படத்தை தயாரித்து வரும் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் இதற்காக அட்லிக்கு இந்நிறுவனம் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பேசி முடித்திருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ திரைப்படத்தை லைகா நிறுவனமும் ’குட் பேட் அக்லி’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் தயாரித்து வரும் நிலையில் இதில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை அட்லி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கான பேச்சுவார்த்தை முடித்து அட்லிக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக கொடுக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாகவும் இந்த சம்பளம் இந்திய திரை உலகில் இதுவரை எந்த இயக்குனரும் வாங்காத சம்பளம் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஒரு மிகப்பெரிய தொகை அட்லிக்கு அட்வான்ஸ் ஆக கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகயிருக்கும் திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அல்லு அர்ஜுன் நடித்து வரும் ’புஷ்பா 2’ திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகும் படத்தை தான் இந்நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் வரை பொறுமை காப்போம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment