கதையுடன் வந்தால் முழு படத்துடன் போகலாம்.. அஜித் பட தயாரிப்பாளரின் பிரமாண்டமான திட்டம்..!
- IndiaGlitz, [Thursday,February 01 2024]
அஜித் பட தயாரிப்பாளர் பிரமாண்டமான திரைப்பட நகரத்தை உருவாக்க இருப்பதாகவும் இந்த திரைப்பட நகருக்குள் கதையுடன் வந்தால் திரும்பிப் போகும் போது முழு படத்துடன் செல்லலாம் என்று அந்த அளவுக்கு இந்த திரைப்பட நகரில் வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.
உத்தரபிரதேசம் மாநில அரசு சமீபத்தில் திரைப்படம் நகரம் அமைக்க முடிவு செய்த நிலையில் இதற்கான டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் அக்ஷய்குமார், போனி கபூர் உள்ளிட்டோர் கொடுத்து இருந்த நிலையில் போனி கபூருக்கு தற்போது டெண்டர் கிடைத்துள்ளது.
இந்த திரைப்பட நகருக்கு தேவையான நிலத்தை உத்தரபிரதேச அரசு இன்னும் ஆறு மாதத்தில் கொடுத்து விடும் என்றும் அதன் பிறகு போனி கபூர் மற்றும் அவருடைய பிசினஸ் பார்ட்னர்கள் உடன் இணைந்து எட்டு ஆண்டுகளில் இந்த திரைப்பட நகரத்தை கட்டி முடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த திரைப்பட நகரில் வரும் வருமானத்தில் 18% உத்தரப்பிரதேசம் மாநில அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும் போனி கபூருக்கு இந்த திரைப்பட நகரில் 48% பங்கும், அவருடைய பிசினஸ் பார்ட்னர்களுக்கு மீதி உள்ள பங்குகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த திரைப்படம் நகரம் குறித்து போனிகபூர் பேட்டி என்று கூறிய போது ’சொந்தமாக திரைப்பட நகரம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது, அது தற்போது தான் அது நிறைவேறியுள்ளது, எங்கள் பிசினஸ் பார்ட்னருடன் சேர்ந்து உருவாக்கப்படும் இந்த திரைப்பட நகரத்தில் ஒருவர் நல்ல கதையுடன் வந்தால் அவர் திரும்பிச் செல்லும் போது முழு படத்துடன் செல்லலாம், அதாவது படப்பிடிப்பு, எடிட்டிங், கிராபிக்ஸ் பணிகள் என அனைத்தும் ஒரே இடத்தில் செய்யும் அளவுக்கு இதில் அனைத்து வசதிகளும் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நொய்டா விமான நிலையம் அருகில் இந்த திரைப்பட நகரம் அமைய இருப்பதால் தயாரிப்பாளர்களுக்கும் திரையுலகினர்களுக்கும் வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.