இந்த 'மதுரை பொண்ணு' அஜித் படத்தின் நாயகி: யாரென கண்டுபிடியுங்கள்!

  • IndiaGlitz, [Tuesday,June 15 2021]

அஜித் படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பள்ளி கால புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

அஜித் நடித்த ‘வரலாறு’ திரைப்படத்தில் அசின் மற்றும் கனிகா ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே. இதில் கனிகா தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது ஆக்டிவ்வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கனிகா சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பள்ளிகால புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். கருப்பு வெள்ளையில் இருக்கும் இந்த புகைப்படத்தில் தான் தலையில் எண்ணெய் தேய்த்து அழகாக ஜடை பின்னி மல்லிகை பூ வைத்து பள்ளி செல்லும் புகைப்படம் இது என்றும் ’மதுரை பொண்ணு’ என்றும் குறிப்பிட்டுள்ளார். கனிகா உண்மையில் மதுரையைச் சேர்ந்தவர் என்பதும் மதுரையிலுள்ள டிவிஎஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தான் அவர் தனது பள்ளிப்படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.