மனோபாலாவுக்கு ஜோடியாகிறாரா அஜித் பட நாயகி?

  • IndiaGlitz, [Saturday,April 02 2022]

அஜித் படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் தற்போது மனோபாலா ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 1999ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் அஜித் நடித்த ’உன்னை தேடி’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதன்பின்னர் ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், வெற்றிக்கொடிகட்டு, சந்திரமுகி, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக சுந்தர் சி நடித்த ’ஆயுதம் செய்வோம்’ என்ற படத்தில் நடித்த மாளவிகா கடந்த 2007ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சுந்தர் சி தற்போது இயக்கி வரும் புதிய திரைப்படத்தில் மங்கம்மா என்ற கேரக்டரில் மாளவிகா நடித்து வருவதாகவும் அவர் மனோபாலாவுக்கு ஜோடியாக நடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய் ஆகிய மூன்று ஹீரோக்களும், அம்ருதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய மூன்று ஹீரோயின்களும் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி விஜய் டிவி டிடியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மாளவிகாவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்த ஒரு புகைப்படத்தை மனோபாலா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.