ஹாலிவுட் வெப்தொடரில் அஜித் பட நடிகை.. மாஸ் டிரைலர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Sunday,October 20 2024]

அஜித் ஜோடியாக நடித்த நடிகை ஹாலிவுட் வெப் தொடரில் நடித்து வரும் நிலையில் அந்த தொடரின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு மட்டுமின்றி பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்தவர் நடிகை தபு. இவர் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்ற திரைப்படத்தில் அஜித் ஜோடியாக நடித்திருந்தார் என்பதும் அது மட்டும் இன்றி ’சினேகிதியே’ உள்பட பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை தபு, மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'டியூன்: பிராபசி' (Dune: Prophecy) என்ற வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

கட்ந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'டியூன்: பாகம் ஒன்று' திரைப்படத்தின் அடிப்படையில் இந்த வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொடர் 'அராக்கிஸ்' என்ற கிரகத்தில் பவுல் அட்ரெய்டிஸ் தலைமையில் புனித போர் தொடங்குவதற்கு 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளை மையமாக கொண்டு சுவாரசியமான அறிவியல் புனைவு கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

'டியூன்: பிராபசி' என்ற இந்த வெப் தொடர் நவம்பர் 17-ந்தேதி ஜியோ சினிமா மற்றும் எச்.பி.ஓ (HBO) ஓ.டி.டி தளங்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாக இருக்கிறது. இதில் தபு சிஸ்டர் பிரான்செஸ்கா என்ற முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், எமிலி வாட்சன், ஆலிவியா வில்லியம்ஸ், டிரேவிஸ் பிம்மல் போன்ற பல பிரபல ஹாலிவுட் நடிகர்களும் இதில் நடிக்கிறார்கள். தற்போது இந்த வெப் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில் அதில் தபு நடித்த சில வினாடிகள் காட்சி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது.

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே உள்ளிட்ட சில இந்திய நடிகைகள் ஹாலிவுட்டில் நடித்துள்ள நிலையில் அந்த வகையில் தற்போது தபுவும் ஹாலிவுட்டில் கால்பதித்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.