சல்மான்கான் அடுத்த படத்தை இயக்குவது அஜித் பட இயக்குனரா?

  • IndiaGlitz, [Friday,November 24 2023]

அஜித் நடித்த இரண்டு திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர், சல்மான் கான் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

அஜீத் நடித்த ’பில்லா’ மற்றும் ’ஆரம்பம்’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். தற்போது நடிகர் அதர்வா சகோதரர் மற்றும் அதிதி சங்கர் நடித்து வரும் திரைப்படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சல்மான் கான் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ’தி புல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இயக்குனர் விஷ்ணுவர்தன், சித்தார்த் மல்ஹோத்ரா, கைரா அத்வானி நடிப்பில் உருவான ’ஷேர்ஷா’ என்ற இந்தி படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜர்பைஜானில் இருந்து திடீரென சென்னை திரும்பிய அஜித்.. 'விடாமுயற்சி' படக்குழு எங்கே?

 அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக அஜர்பைஜானில்  நடந்து வந்த நிலையில் திடீரென அஜித் மட்டும் சென்னை திரும்பி உள்ளதாகவும் 'விடாமுயற்சி' படக்குழுவினர் துபாய்

மன்சூர் அலிகான் மன்னிப்புக்கு த்ரிஷா அளித்த பதில்.. முடிவுக்கு வந்ததா பிரச்சனை?

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் இன்று காலை மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அதற்கு த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு இணையத்தில்

குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: காவல் ஆணையரிடம் விசிக புகார்..!

சேரி மொழியை அவமதித்ததாக நடிகை குஷ்பு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்

'கார்த்தி 27' படத்தின் நாயகி பிரபல சீரியல் நடிகையா? அடித்தது அதிர்ஷ்டம்..!

கார்த்தி நடிக்க இருக்கும்  27 வது திரைப்படத்தை பிரேம்குமார் இயக்கவுள்ள நிலையில் இந்த படத்தில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோவாகும் விஜய் சேதுபதி மகன்.. டைட்டில் போஸ்டர் ரிலீஸ்..!

பிரபல நடிகர்களின் வாரிசுகள் திரையுலகில் என்ட்ரி ஆகி வரும் நிலையில் சமீபத்தில் தளபதி விஜயின் மகன்  இயக்குனராக அறிமுகமாக இருக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தற்போது விஜய்