சன் டிவி சீரியலில் அறிமுகமாகும் தேசிய விருது பெற்ற இயக்குனர்.. அஜித்தின் 2 படங்களை இயக்கியவர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித்தின் இரண்டு படங்களை இயக்கிய, அதில் ஒன்றுக்காக தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் அகத்தியன் தற்போது சீரியல் நடிகராகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடித்த 'காதல் கோட்டை’ மற்றும் ’வான்மதி’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் அகத்தியன். "காதல் கோட்டை" படத்திற்காக அவர் தேசிய விருதை பெற்றார். தமிழ் சினிமாவில், சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற முதல் இயக்குநர் இவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அகத்தியனின் மகள் கனி, திரைத்துறையில் ஆடை வடிவமைப்பாளராக இருப்பதுடன், "குக் வித் கோமாளி" உட்பட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, அவரது மகளான விஜயலட்சுமியும், நிரஞ்சனியும் நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களை இயக்காமல் இருந்து வந்த அகத்தியன், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் "மூன்று முடிச்சு" என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த தொடரில் நடிகை தர்ஷனா இணைந்த நிலையில் தற்போது அகத்தியனும் இணைந்துள்ளார்.
"மூன்று முடிச்சு" சீரியல் சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மேலும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments