சன் டிவி சீரியலில் அறிமுகமாகும் தேசிய விருது பெற்ற இயக்குனர்.. அஜித்தின் 2 படங்களை இயக்கியவர்..!

  • IndiaGlitz, [Wednesday,September 18 2024]

அஜித்தின் இரண்டு படங்களை இயக்கிய, அதில் ஒன்றுக்காக தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் அகத்தியன் தற்போது சீரியல் நடிகராகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடித்த 'காதல் கோட்டை’ மற்றும் ’வான்மதி’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் அகத்தியன். காதல் கோட்டை படத்திற்காக அவர் தேசிய விருதை பெற்றார். தமிழ் சினிமாவில், சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற முதல் இயக்குநர் இவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அகத்தியனின் மகள் கனி, திரைத்துறையில் ஆடை வடிவமைப்பாளராக இருப்பதுடன், குக் வித் கோமாளி உட்பட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, அவரது மகளான விஜயலட்சுமியும், நிரஞ்சனியும் நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களை இயக்காமல் இருந்து வந்த அகத்தியன், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த தொடரில் நடிகை தர்ஷனா இணைந்த நிலையில் தற்போது அகத்தியனும் இணைந்துள்ளார்.

மூன்று முடிச்சு சீரியல் சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மேலும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

விஜய்யின் 'கோட்' படத்தின் 13 நாள் வசூல்.. அதிகாரபூர்வமாக அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி..!

தளபதி விஜய் நடிப்பில் உருவான 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான நிலையில் தற்போது, இப்படத்தின் 13 நாட்களின் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பாளர் அர்ச்சனா

மூன்று மாநிலங்கள், மூன்று கதைகள், பிரம்மாண்ட பான் இந்திய திரில்லர் திரைப்படம்

ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்  தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான

2025-ம் ஆண்டு ராசிபலன் : உங்கள் ராசிக்கு என்ன பலன்கள்..?

பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், வருகின்ற 2025-ம் ஆண்டில் நடைபெற உள்ள முக்கியமான கிரக பெயர்ச்சிகள் மற்றும்

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த விஜய்.. அமைச்சர் உதயநிதி கூறிய கமெண்ட்..!

நேற்று பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், பெரியார் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படம்: கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி பாராட்டு..!

செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று என கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.