என்ன ஆச்சு அஜித் பட நடிகைக்கு? புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் படத்தில் நாயகியாக நடித்த நடிகைக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் படிப்படியாக குணமாகி வருவதாகவும் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
’பைவ் ஸ்டார்’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கனிகா. அதன் பிறகு அவர் சேரன் நடித்து இயக்கிய ’ஆட்டோகிராப்’ அஜித் நடித்த ’வரலாறு’ உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் ’எதிர்நீச்சல்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கனிகாவுக்கு ஒரு மில்லியனுக்கு மேலான ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் தனது கணுக்காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து ஒரு வாரம் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியதாகவும் கனிகா தெரிவித்துள்ளார்.
மேலும் தான் படிப்படியாக குணமாகி வருவதாக அவர் கூறியதோடு புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்துள்ள நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout