கணவரின் பிறந்த நாளில் ரொமான்ஸ் போட்டோஷூட்.. அஜித் நாயகியின் அழகிய புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் படத்தில் நாயகியாக நடித்த நடிகை தனது கணவரின் பிறந்தநாளை அடுத்து எடுக்கப்பட்ட ரொமான்ஸ் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன
அஜித் நடித்த ’வரலாறு’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கனிகா என்பதும் அவர் தமிழ் மட்டுமின்றி ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் அவரது கேரக்டருக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கனிகாவுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயிர்கள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது தனது கணவர் மற்றும் மகனின் புகைப்படங்களை அவர் பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை கனிகா கடந்த 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் நடிகை ஜெயஸ்ரீயின் சகோதரர் என்பது குறிப்பிடப்படுவது. இந்த நிலையில் இன்று கனிகாவின் கணவர் ஷியாம் ராதா கிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறியுள்ள நடிகை கனிகா அவருடன் எடுத்த ரொமான்ஸ் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷ்யாம்! என் வாழ்வின் புதிய காற்றின் சுவாசம் நீ. ஒரு அற்புதமான மகன், அன்பான நண்பன், அக்கறையுள்ள சகோதரன், அற்புதமான அப்பா மற்றும் புரிந்துகொள்ளும் கணவனாக இருந்து, அந்த ஆற்றல், அன்பு மற்றும் வெறித்தனம் அனைத்தையும் தந்து எனது வாழ்க்கையை முழுமையாக்கியதற்கு நன்றி
உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன். கடவுள் உங்களை நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அபரிமிதமான அன்புடன் ஆசீர்வதிப்பார்’ என்று பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com