close
Choose your channels

ஹாலிவுட் படத்தின் முக்கிய கேரக்டரில் தமிழ் நடிகை.. அஜித் ஜோடியாக நடித்தவர்..!

Tuesday, May 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் உள்பட பல பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்தவர் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான ’காதல் தேசம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை தபு. அதன் பிறகு அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’இருவர்’ அர்ஜுன் நடித்து இயக்கிய ’தாயின் மணிக்கொடி’ அஜித் நடித்த ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஜோதிகா நடித்த’ சினேகிதி’ உள்பட சில தமிழ் படங்களில் ஏராளமான ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார்

இந்த நிலையில் தற்போது ஹாலிவுட்டில் உருவாகயிருக்கும் ‘டுயின்’ என்ற வெப் தொடரில் நடிகை தபு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. பிராங்க் ஹெர்பார்ட் எழுதிய ‘டுயின்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு ஏற்கனவே சில தொடர்கள் வெளிவந்திருந்த நிலையில் தற்போது ‘டுயின்’ முன் கதையை படமாக்கும் முயற்சியில் படக்குழுவினர் களமிறங்கி இருப்பதாகவும், அதில் தபு முக்கிய இடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த படத்தை தொடங்குவதாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக காலதாமதமானதை அடுத்து தற்போது இந்த படத்தின் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

எமிலி வாட்சன், ஒலிவியா வில்லியம்ஸ், டிராவிஸ் ஃபிம்மல், ஜோஹ்தி மே, மார்க் ஸ்ட்ராங், ஜோஷ் ஹஸ்டான், சோலி லியா, ஃபாவிலியன் கன்னிங்ஹாம், எட்வர்ட் டேவிஸ், ஐயோஃப் ஹிண்ட்ஸ், கிறிஸ் மேசன், மற்றும் ஷாலோம் ப்ரூன்-பிராங்க்ளின் முக்கிய வேடங்களில் இந்த தொடரில் நடிக்கவுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment