close
Choose your channels

நான் பார்த்த அந்த அதிர்ச்சி காட்சி.. மனைவியை விவாகரத்து செய்தது குறித்து அஜித் பட நடிகர்..!

Saturday, December 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்ய தான் பார்த்த ஒரு காட்சி தான் என்றும் அதற்கு மூன்று பேர் காரணம் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரர் பாலா என்பதும் இவர் அஜித் நடித்த ‘வீரம்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நடிகர் பாலாவுக்கும் பாடகி அம்ரிதா sஉரேஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பாலா, எலிசபெத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கான காரணம் கூறிய அவர் ’நான் பார்த்த அந்த காட்சி தான் என்னை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்றும் அந்த ஒரு நொடி என் வாழ்க்கை இருண்டது போல் தோன்றியது தெரிவித்தார்

இந்த அதிர்ச்சி காட்சியின் பின்னணியில் இரண்டு பேர் அல்ல மூன்று பேர் இருக்கின்றனர், அவர்களுக்கு கடவுள் நிச்சயம் தண்டனை வழங்குவார், என் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டுதான் எதையும் என்னால் வெளியில் சொல்ல முடியவில்லை, என் குழந்தை ஆணாக இருந்திருந்தால் கண்டிப்பாக புகைப்பட ஆதாரங்களுடன் அவற்றை வெளிப்படுத்தி இருப்பேன் என்று தெரிவித்தார்.

நடிகர் பாலா தனது மனைவியை விவாகரத்து செய்ததற்கு அவர் பார்த்த அந்த அதிர்ச்சி காட்சி தான் காரணம் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment