வைகுண்ட ஏகாதேசி அன்று இயற்கை எய்திய அஜித் பட நடிகரின் தந்தை: ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பத்திரிகையாளரும் அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் நடித்தவருமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை நேற்று வைகுண்ட ஏகாதேசி தினத்தில் இயற்கை எய்தியதை அடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே முன்னணி ஊடகங்களில் பணிபுரிந்தார் என்பதும், அவர் எடுக்கும் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ரகுநாத் ஆச்சாரியா என்பவர் நேற்று வைகுண்ட ஏகாதேசி தினத்தில் காலமானார். இதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்த நிலையில் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் தொழிலதிபர்கள் பலரும் அவருடைய தந்தைக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ரங்கராஜ் பாண்டேவின் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். ரங்கராஜ் பாண்டே தந்தையின் இறப்பிற்கு என்ன காரணம் என்பதை அவர் கேட்டறிந்தார். தனது தந்தை இதுவரை எந்த ஒரு மருத்துவ சிகிச்சையும் செய்து கொண்டதில்லை என்றும் அவரது மரணம் இயற்கையானது என்றும் ரஜினியிடம் அவர் கூறியதாகவும் தெரிகிறது. மேலும் ரஜினியிடம் தனது குடும்பத்தினரையும் ரங்கராஜ் பாண்டே அறிமுகம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தில் வழக்கறிஞராகவும், விஜய்சேதுபதி நடித்த ‘க/பெ ரணசிங்கம் என்ற படத்தில் கலெக்டராகவும் ரங்கராஜ் பாண்டே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments