ரசிகர்களுக்கு அஜித் கூறிய முக்கிய தகவல்: மேனேஜர் சுரேஷ் சந்திரா டுவிட்!

  • IndiaGlitz, [Saturday,August 20 2022]

நடிகர் அஜித் எந்தவித சமூக வலைதளங்களிலும் இல்லை என்பதால் அவர் தனது ரசிகர்களுக்கும் அறிவுரை கூற வேண்டும் என்றாலோ அல்லது பொது மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றாலோ தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்கள் மூலம் தெரிவிப்பார் என்பதும் அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா அந்த தகவலை தனது டுவிட்டரில் பதிவு செய்வார் என்பது தெரிந்ததே.

அந்தவகையில் தற்போது அஜித் தரப்பில் இருந்து அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா பதிவு செய்துள்ள ஒரு தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில் கூறியிருப்பதாவது:

காதுகளில் சத்தம் ஒலிக்கிறதா...

ஒன்று அல்லது இரண்டு காதுகளிலும் ஒலிக்கும் சத்தம் நிலையானதாக இருக்கலாம். அல்லது வந்து வந்து போகலாம், இப்படி காதுகளில் ஒலிக்கும் ஒரு வித ஒலி பெரும்பாலும் காது கேளாமையுடன் தொடர்புடையது.

இதன் பொதுவான காரணங்கள்...

காதுகளில் சத்தம் ஒலிப்பது அடிப்படை நோய் காரணமாக இல்லாத காரணங்களை கூடகொண்டிருக்கலாம். அதீத சத்தத்தை கேட்பது, தலையில் காயங்கள் ஏற்படுவது, அதிக அளவில் காதில் அழுக்கு இருப்பது, மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகள் போன்ற சில பொதுவான காரணங்களை குறிப்பிட்டு, 'உங்கள் காதுகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் - நிபந்தனையற்ற அன்புடன் அஜித்' என கூறியுள்ளார்.

ரசிகர்களின் உடல்நலம் மீது அக்கறை கொண்டு அஜித் தெரிவித்த இந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது.