ஒரே வாரத்தில் அஜித் சந்தித்த மூன்றாவது பிரபலம்

  • IndiaGlitz, [Tuesday,February 19 2019]

தல அஜித் நடித்து வரும் 'பிங்க்' ரீமேக் படமான 'தல 59' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆகியோர்களை அஜித் சந்தித்து பேசினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் 'தல 59' படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் அதே ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் 'பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. ஓய்வு நேரத்தில் பிரபாஸ் நடித்து வரும் செட்டிற்கு சென்ற அஜித், பிரபாஸை சந்தித்து சுமார் ஒருமணி நேரம் பேசிக்கொண்டிருந்தாராம்.

ஏற்கனவே அஜித்துடன் 'ஆரம்பம்' படத்தில் நடித்த ராணா மூலம் அஜித் குறித்து பல விஷயங்களை கேள்விப்பட்டிருந்த பிரபாஸ், அஜித்தை நேரில் பார்த்த பின்னர், தான் கேள்விப்பட்டதை விட பலமடங்கு அஜித்திடம் நல்ல குணம் இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தாராம்.

ஒரே வாரத்தில் பிரியதர்ஷன், மோகன்லால் மற்றும் பிரபாஸ் என மூன்று பிரபலங்களை சந்தித்துள்ள அஜித் இன்னும் யார் யாரை சந்திக்கவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஓவர் இண்டலிஜெண்ட், யாருப்பா அது? 'தடம்' டிரைலர் விமர்சனம்

அருண்விஜய் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கிய 'தடம்' திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

'சிவகார்த்திகேயன் 15' படத்தின் நாயகி அதிகாரபூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ''Mr லோக்கல் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் மே 1ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்: அதிகாரபூர்வ அறிவிப்பு

இன்று காலை அதிமுக கூட்டணியில் 7 மக்களவை தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை தொகுதிகளையும் பாமக பெற்றுள்ள நிலையில் சற்றுமுன் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்

ஐபிஎல் போட்டியின் அட்டவணை: முதல் போட்டியில் சென்னை-பெங்களூர் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திருவிழா இந்த ஆண்டு வரும் மார்ச் மாதம் 23ஆம் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியும் மோதவுள்ளது.

பெங்களூரில் நேருக்கு நேர் மோதிய 2 விமானங்கள்: விமானிகள் காயம்

பெங்களூரில் சர்வதேச விமானத் தொழில் கண்காட்சி நாளை தொடங்கி வரும் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் பல்வேறு சாகச காட்சிகள் நடைபெறவுள்ள நிலையில்