'நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா? என்னை ஏன் தேடுறீங்க: அஜித்தின் வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தன்னை மூன்று நாட்களாக தேடிக் கொண்டிருப்பதாக கூறிய ரசிகர்களிடம் ’நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா? என்னை ஏன் தேடுறீங்க’ என அஜித் கூறும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த அவர் அங்கு உள்ள கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். மேலும் அஜீத்தின் பைக் பயணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
இந்த நிலையில் அஜித் பைக் பயணம் செய்வதை அறிந்த அந்த பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் அவரை பைக்கில் சென்று பார்க்க முயற்சித்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் அஜித்தை பார்த்த போது ’உங்களை தான் நாங்கள் மூன்று நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறோம்’ என்று கூற அதற்கு அஜித் ’’நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா? என்னை ஏன் தேடுறீங்க’ என்று கேட்க அதற்கு அந்த இளைஞர்கள், சும்மா உங்களை பார்க்க தான் என்று கூறுகிறார்கள். அதன் பிறகு அஜித் ஹெல்மெட்டை அகற்றிவிட்டு அவர்களிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
#Ajith sir ❤️??#AjithKumar #AK #AK61 pic.twitter.com/LM6XkYO7qZ
— Ajith Network (@AjithNetwork) September 16, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments