கதவை திறந்து ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த அஜித்: வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரவன் கதவைத் திறந்து ரசிகர்களுக்கு அஜித் தரிசனம் கொடுத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
அஜித் நடித்து முடித்துள்ள ’துணிவு’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள வங்கிக்கொள்ளை அடிக்கும் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அண்ணாசாலையில் சமீபத்தில் நடந்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு சில பேட்ச் வொர்க் காட்சிகளின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் நடைபெறுகிறது. இதனை அடுத்து அந்த படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்ட நிலையில் அஜித்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் குவிந்தனர்.
அவர் தங்கியிருந்த கேரவனை சுற்றி ரசிகர்கள் சூழ்ந்து கொண்ட நிலையில் அஜீத் கேரவன் கதவை ரசிகர்களுக்கு கையசைத்தார். அஜித்தை பார்த்த சந்தோஷத்தில் அவரது ரசிகர்கள் கரகோஷம் இட்டனர். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் , மஞ்சுவாரியார், வீரா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார் என்பதும் ஜிப்ரான் இசையமைத்து வரும் இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The Word #THALA is an emotion ??????
— AK??ᵀʰᵘⁿᶦᵛᵘ (@AjithKumar_AK__) October 21, 2022
.#Thunivu #AjithKumar pic.twitter.com/lrDqcTR0uL
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com