கதவை திறந்து ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த அஜித்: வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Sunday,October 23 2022]

கேரவன் கதவைத் திறந்து ரசிகர்களுக்கு அஜித் தரிசனம் கொடுத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

அஜித் நடித்து முடித்துள்ள ’துணிவு’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள வங்கிக்கொள்ளை அடிக்கும் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அண்ணாசாலையில் சமீபத்தில் நடந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு சில பேட்ச் வொர்க் காட்சிகளின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் நடைபெறுகிறது. இதனை அடுத்து அந்த படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்ட நிலையில் அஜித்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் குவிந்தனர்.

அவர் தங்கியிருந்த கேரவனை சுற்றி ரசிகர்கள் சூழ்ந்து கொண்ட நிலையில் அஜீத் கேரவன் கதவை ரசிகர்களுக்கு கையசைத்தார். அஜித்தை பார்த்த சந்தோஷத்தில் அவரது ரசிகர்கள் கரகோஷம் இட்டனர். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் , மஞ்சுவாரியார், வீரா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார் என்பதும் ஜிப்ரான் இசையமைத்து வரும் இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கவனம் ஈர்க்கும் நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' பட போஸ்டர்

'பாகுபலி' படப்புகழ் வசூல் சக்கரவர்த்தி நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, 'ஆதி புருஷ்' பட குழுவினர் தெய்வீகம் ததும்பும் ராமரை போல் தோற்றமளிக்கும்

பிக்பாஸ் 6வது சீசனின் முதல் எலிமினேஷன் இவர் தான்: தொடரும் செண்டிமெண்ட்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த பொண்ணுக்கு 23 வயது இல்ல, மலேசியாவும் இல்ல.. 2ஆம் திருமணம் குறித்து மனம் திறந்த பப்லு!

நடிகர் பப்லுவுக்கு 55 வயது ஆகியிருக்கும் நிலையில் அவர் 23 வயது இளம் பெண்ணை திருமணம் செய்ய போகிறார் என்றும், அவர் திருமணம் செய்ய போகும் பெண் மலேசியாவை சேர்ந்தவர் என்றும்

பிரின்ஸஸ்-க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய 'பிரின்ஸ்' நாயகன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இன்று அவரது பிரின்ஸஸ்-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.

எவனாச்சும் முகத்தை பாக்குறானா? ஷிவானியின் ஹாட் போட்டோஷூட்டிற்கு குவியும் கமெண்ட்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் சினிமா நடிகையுமான ஷிவானி நாராயணன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த