மும்பையில் போனிகபூரை சந்தித்த அஜித்: வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மும்பையில் உள்ள போனி கபூரின் அலுவலகத்திற்கு அஜித் சென்று அவரை சந்தித்ததாக புகைப்படத்துடன் கூடிய தகவல் வெளியாகியுள்ளது.
போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நிபந்தனைகளில் தளர்வு ஏற்பட்டவுடன் இந்த படம் ரிலீஸாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் உறுதிசெய்யப்பட்ட நிலையில் நேற்று மும்பையில் உள்ள போனி கபூரின் அலுவலத்திற்கு அஜித் சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து உள்ளார். ’அஜித் 61’ படத்தின் படப்பிடிப்புக்கு முன்னர் இந்த சந்திப்பு நடந்துள்ளதை அடுத்து இந்த படம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் போனி கபூர் தனது சமூக வலைத்தளத்தில் தன்னை அஜித் மும்பை அலுவலகத்தில் சந்தித்ததாக கூறி புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments