அஜித் ஒரு நடிகர் என்பதோடு அடக்கி விட முடியாது: அஜர்பைஜான் நாட்டின் இந்திய தூதர்..!

  • IndiaGlitz, [Saturday,July 27 2024]

சமீபத்தில் அஜர்பைஜான் நாட்டில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு நடைபெற்ற போது அஜித்தை சந்தித்ததாக அஜர்பைஜான் நாட்டின் இந்திய தூதர் ஸ்ரீதரன் மதுசூதனன் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:

அஜர்பைஜானில் நடைபெற்ற ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு நாட்களின்போது நடிகர் அஜித் ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடன் சக நடிகர்கள் ஆரவ், நிக்கில் வந்திருந்தார்கள். சில அஜர்பைஜான் தமிழ் நண்பர்களும் வந்தார்கள்.

ஒரு கை விரல்களில் அடங்கிவிடக்கூடிய எண்ணிக்கையில் தான் அஜித்தின் திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ‘அஜித் என்பவர் ஒரு நடிகர்’ என்கிற ஒற்றை விவரிப்பில் அவரை அடக்கி விட முடியாது என்பது எங்கள் உரையாடல்களின் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. குடும்பக் கதைகளும் சேர்ந்து கொள்ள, உணவும் சிரிப்பும் மகிழ்ச்சியுமாய் எல்லோரும் நள்ளிரவு தாண்டியும் பேசிக்கொண்டிருந்தோம்

எங்களுடைய ஏதோ ஒரு குடும்ப நிகழ்ச்சி விவரிப்பின் போது அஜித் உட்பட எல்லோரும் குலுங்கி குலுங்கிச் சிரித்தபோது, வைதேகியும் நானும் எங்கள் உரையாடல்களுக்கு டிக்கெட் போடலாம் என்று அடிக்கடி எழும் எண்ணம் மீண்டும் வந்தது. ஆர்வத்துக்காக ஒரு புது விஷயத்தைச் செய்து பார்ப்பதன் மகிழ்ச்சி, வாழ்வின் பல்வேறு கட்டங்களில் நம் மனநிலை மாறுவது, பைக், கார், சைக்கிள் பயணங்கள் என்று உடலும் மனமும் இணைந்து செயல்படும் தருணங்களின் அனுபவம் என்று இயல்பான போக்கில் போனது பேச்சு.

அஜித் விடைபெற்றுச் சென்ற பிறகு பல சிந்தனைகள். மனிதர்கள் ஏன் பல விஷயங்களை செய்கிறார்கள்? அவர்களது ஊக்கம் எதைப் பற்றியது? இவற்றிலிருந்து அவர்களுக்கு என்ன கிடைக்கிறது? என் பதில்: ஆர்வத்தால் செய்யும் காரியங்களுக்குத் திடமான பலன்கள் எதுவும் தேவையில்லை.

ஒரு விஷயத்தை முயன்று பார்த்து அனுபவித்திருக்கிறோம் என்பது போதாதா? கடைசியில் அதையும் மீறி எந்த விஷயத்தில் என்ன கிடைத்துவிடுகிறது? அவ்வளவு தான் வாழ்க்கை: அனுபவம்”

 

More News

நடிகை அஞ்சலியின் புஷ்பாவுக்கு பெருகி வரும் ஆதரவு.. 3 நாட்களில் 35 மில்லியனா?

நடிகை அஞ்சலி, புஷ்பா என்ற விலைமாது கேரக்டரில் ஒரு வெப் தொடரில் நடித்திருந்த நிலையில் இந்த வெப் தொடருக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளதை அடுத்து அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பெண்களிடம் அத்துமீறினாரா தமிழ் நடிகர்.. பாடகி சின்மயி பகீர் குற்றச்சாட்டு..!

தமிழ் நடிகர் ஒருவர் பெண்களிடம் அத்துமீறியதாக பாடகி சின்மயி குற்றச்சாட்டு கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திடீரென மன்னிப்பு கேட்ட சுதா கொங்கரா.. மன்னிப்பு கேட்கும் அளவுக்கு என்ன செய்தார்?

இயக்குனர் சுதா கொங்கரா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த கருத்துக்காக மன்னிப்பு கேட்பதாக அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

படம் தயாரிக்காத வெற்று தயாரிப்பாளர்களே.. முடிந்தால் என்னை தடுத்து பாருங்கள்: விஷால் பதிலடி..!

நடிகர் விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியான நிலையில் சில மணி நேரத்தில்

கல்லூரி விழாவில் கலந்து கொண்டபோது ஆபாச உடையா?  பதிலடி கொடுத்த அமலாபால்..!

நடிகை அமலாபால் சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட போது குட்டையான ஆபாச உடை அணிந்ததாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டு கூறிய நிலையில் அதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.