அஜித்தின் 'மங்காத்தா' காப்பியடித்து எடுத்ததுதான். வெங்கட்பிரபு வெளியிட்ட ரகசியம்

  • IndiaGlitz, [Friday,December 09 2016]

அஜித் நடித்த படங்களில் சூப்பர் ஹிட் ஆன படங்களில் ஒன்று 'மங்காத்தா'. வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு இன்றளவும் விருப்பத்திற்குரிய படமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படம் ஆங்கில படத்தின் காப்பி என்று பலர் சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்து வந்தது உண்டு. இந்நிலையில் வெங்கட்பிரபு, 'மங்காத்தா' படம் காப்பிதான் என்பதை பேட்டி ஒன்றில் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் எது ஆங்கில படத்தின் காப்பி இல்லை என்றும் தனது முந்தைய படமான 'சரோஜா' படத்தின் காப்பி என்றும் அவர் கூறியுள்ளார்

'சரோஜா' படத்தின் கதையை கொஞ்சம் உல்டா செய்து மங்காத்தா' கதையை தயார் செய்ததாகவும், 'சரோஜா' படத்தில் நடித்த சம்பத் கேரக்டர்தான் அஜித் கேரக்டராக மாறியது என்றும், இந்த படத்தில் நடித்த ஜெயராம் கேரக்டர்தான் அர்ஜூன் கேரக்டராக மாற்றியதாகவும் கூறியுள்ளார். இரண்டு படங்களிலும் நான்கு நண்பர்கள் இருப்பார்கள் என்றும் சரோஜா படத்தில் தொழிலதிபரின் மகளை கடத்தியதை போல 'மங்காத்தா' படத்தில் தொழிலதிபரின் பணத்தை கடத்துவார்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்த ரகசியத்தை இதுவரை வெளியிடாமல் பாதுகாத்து வைத்திருந்ததாகவும் 'மங்காத்தா' படம் ஆங்கில படத்தின் காப்பி என தொடர்ந்து விமர்சனம் வெளிவந்து கொண்டிருப்பதால் தற்போது இந்த ரகசியத்தை வெளியிட்டதாகவும் கூறியுள்ளார்.