அஜித்தின் அரசியல் வருகை குறித்து டுவிட்டரில் மேனேஜர் விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் கடந்த 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படம் மூன்றே நாட்களில் ரூபாய் 100 கோடியும் ஐந்து நாட்களில் ரூபாய் 150 கோடியும் வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி ’வலிமை’ படம் ரிலீஸ் ஆனதால் அஜித் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அது மட்டுமின்றி கடம்பூர் ராஜு உள்பட ஒரு சில முன்னால் அதிமுக அமைச்சர்கள் அஜித் அரசியலுக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அஜீத் மேனேஜர் சுரேஷ் சந்திரா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அஜித்துக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் அவர் அரசியலுக்கு வரப்போவதாக வெளிவந்து கொண்டிருக்கும் தவறான தகவல்களை தயவுசெய்து ஊடகங்களை பதிவு செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
"Mr Ajith kumar has got no intentions of venturing into politics and hence humbly requests the respected members of the media to refrain from encouraging such misleading informations".https://t.co/vILUFO8HCI
— Suresh Chandra (@SureshChandraa) March 1, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments