'சஞ்சய் தத்'தின் எளிமையை அஜீத்திடம் பார்த்தேன். ராகுல் தேவ்

  • IndiaGlitz, [Tuesday,September 08 2015]

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள ராகுல்தேவ், இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்தும், அஜீத்துடன் நடித்த அனுபவங்கள் குறித்தும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, 'தென்னிந்திய மொழி திரைப்படங்களில் தமிழ்த்திரைப்படம் மிகவும் வித்தியாசமானது என்பதை நான் இந்த படத்தில் நடித்தபோது புரிந்து கொண்டேன். மோகன்லா, சிரஞ்சீவி, நாகார்ஜுனா ஆகியோர்களுடன் நான் நடித்திருந்தாலும் 'தல 56' படம், எனக்கு புது அனுபவங்களை கொடுத்தது.

நான் உண்மையாகவே அஜீத்தை பெரிதும் மதிக்கின்றேன். அவருடைய எளிமை எனக்கு சஞ்சய் தத் அவர்களை ஞாபகப்படுத்துகிறது. அதிகாலை 5 மணிக்கு படப்பிடிப்பு என்றாலும் நேரம் தவறாமல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அவருடைய கடின உழைப்பு, மிகைப்படுத்தாத நடிப்பு மற்றும் அவர் தயாரிக்கும் பிரியாணி ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தது.

'அசோகா' படத்தில் நானும் அஜீத்தும் நடித்துள்ளோம். ஆனால் நாங்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் அந்த படத்தில் இல்லை. இந்த படத்தில்தான் நான் முதன்முதலாக அவருடன் இணைந்து நடிக்கின்றேன். படப்பிடிப்பு ஆரம்பித்த முதல் நாளில் என்னை கட்டிப்பிடித்து 'வெல்கம் டு சென்னை' என்று அவர் கூறிய காட்சி இன்னும் என் முன்னால் இருக்கின்றது' என்று கூறினார்.