விவேகம்' படப்பிடிப்பிற்காக பல்கேரியா கிளம்பினார் தல அஜித்.

  • IndiaGlitz, [Wednesday,March 15 2017]

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் பிரமாண்டமான திரைப்படமான 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ஏற்கனவே படக்குழுவினர் பல்கேரியா சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்றிரவு அஜித்தும் பல்கேரியா கிளம்பியுள்ளார். இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த அஜித்துடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இன்று பல்கேரியா செல்லும் அஜித் மார்ச் 16 முதல் அதாவது நாளை முதல் 'விவேகம்' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'விவேகம்' படக்குழுவினர் படப்பிடிப்பிற்காக பல்கேரியா சென்றுள்ள நிலையில் சென்னையில் இந்த படத்தின் டீசர் பணிகளை டெக்னிக்கல் குழுவினர் விறுவிறுப்பாக தயார் செய்து வருகின்றனர். அனேகமாக இன்னும் ஒருசில நாட்களில் டீசர் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது

மேலும் இந்த படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் 'V' செண்டிமெண்டில் அமைந்துள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது 10ஆம் தேதி செண்டிமெண்டும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்-சிவா இணைந்த முந்தைய படமான 'வேதாளம்' திரைப்படமும் 10ஆம் தேதிதான் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.