அஜித் குமார் ரேசிங் டீம் லோகோ ரிலீஸ்.. அணியின் முதன்மை ஓட்டுனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,October 22 2024]

நடிகர் அஜித் குமார் சமீபத்தில் ஒரு ரேசிங் டீம் உருவாக்கியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த டீமின் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

அஜித் குமார் ரேசிங் அணி, ஐரோப்பாவில் நடைபெற இருக்கும் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அஜித் குமார் ரேசிங் அணியின் லோகோ சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநர் அஜித் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், அஜித்துடன் மேலும் 3 கார் ரேஸ் ஓட்டுநர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஜித் குமார் அணியின் லோகோ தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த லோகோவில் அஜித் குமார் ரேசிங் என்ற எழுத்துக்களுடன், காரின் புகைப்படமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், அவர் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் திரைப்படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்வது, இன்னொரு பக்கம் கார் ரேஸில் கலந்து கொள்வது என அஜித் தற்போது பிஸியாக உள்ளார்.

More News

ட்ரிம் செய்யப்பட்ட 18 நிமிடங்களை சேர்த்து பார்க்கலாம்.. 'மெய்யழகன்' ஓடிடி ரிலீஸ் தேதி..!

கார்த்தி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன சில நாட்களில், 18 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஓடிடியில் ட்ரிம் செய்யப்பட்ட காட்சிகளையும் சேர்த்து பார்க்கலாம்

கனவு நனவாகிவிட்டது.. ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன ஷாலின் ஜோயா..

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனை நடிகை ஷாலின் ஜோயா காதலிப்பதாக கூறப்படும் நிலையில், சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நல்ல செய்தி பகிர்ந்ததையடுத்து, அவருக்கு ரசிகர்கள்

டீல் கேன்சல் என அறிவித்த ஆஜே ஆனந்தி.. எங்களால் வாக்கை காப்பாத்த முடியாது: முத்துகுமார் பதிலடி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொள்வதும், சனி ஞாயிறு அன்று தொகுப்பாளர் விஜய் சேதுபதி அந்த சண்டை குறித்து விசாரணை செய்து வருவதும்

சிவகார்த்திகேயனின் 'அமரன்' டிரைலர் எப்போது.. ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

தவெக தலைவர் விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தி.. என்ன ஆச்சு?

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகியான திரு. சரவணன் திடீரென உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த செய்தி  அக்கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை