சென்னைக்கு வெள்ள நிவாரண உதவி செய்த கேரள அஜீத் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Sunday,December 13 2015]

கடந்த வாரம் சென்னையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிவாரண உதவியாக மத்திய, மாநில அரசுகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவியும் நிவாரண பொருட்களும் குவிந்து வருவதை ஏற்கனவே அவ்வப்போது பார்த்து வந்தோம்.

இந்நிலையில் தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி கேரள, தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகினர்களும் சென்னை வெள்ள பாதிப்புக்காக தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் உள்ள அஜீத் ரசிகர்கள் உணவு, உடை மற்றும் மருந்து பொருட்கள் அடங்கிய வாகனம் ஒன்றை சென்னைக்கு அனுப்பியுள்ளனர். கேரளாவில் உள்ள அனைத்து அஜித் ரசிகர் மன்றங்களும் ஒருங்கிணைந்து இந்த பொருட்களை அனுப்பியதற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித்தின் அடுத்த படத்தில் 'பெங்கால் டைகர்' நடிகர்

கடந்த தீபாவளி தினத்தில் அஜீத் நடித்த 'வேதாளம்' படம் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் 'வேதாளம்' ரிலீஸுக்கு பின்னர் அஜித்...

'ஈட்டி' வெற்றியை அடுத்து சுறுசுறுப்பாகும் அதர்வாவின் அடுத்த படம்

அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் நேற்று வெளியான 'ஈட்டி' திரைப்படம் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அதர்வாவின் அடுத்த படமான...

சென்னையில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது ஷாருக்கானின் 'தில்வாலே'

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் திரைப்படங்கள் வட இந்தியாவில் மட்டுமின்றி சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆவது வழக்கம்...

வெள்ள நிவாரண நிதி. சமந்தா கொடுத்த ரூ.30 லட்சம்

கடந்த வாரம் சென்னை, கடலூர் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டோர்களுக்கு உதவிடும் வகையில் கோலிவுட் திரையுலகினர் கொடுத்த நிதியுதவி பலகோடிகளை தாண்டியுள்ளது என்பதை அனைவரும் அறிவோம்....

வெற்றிமாறனின் 'விசாரணை' ரிலீஸ் தேதி?

பொல்லாதவன், ஆடுகளம் என்ற இரண்டே படங்களை இயக்கியிருந்தாலும் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் இயக்குனர் வெற்றிமாறன்...