'விவேகம்' படத்தின் 3வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,July 18 2017]

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள 'விவேகம்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் மூன்றாவது பாடலான மெலடி பாடல் மிக விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சற்று முன்னர் அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் 'காதலடா' என்று தொடங்கும் கிளாசிக்கல் பாடல் வரும் 20ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்த செய்தி அஜித் ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
பாடலாசிரியர் கபிலன் எழுதியுள்ள இந்த பாடல் அஜித்-காஜல் அகர்வால் ஆகியோர்களின் ரொமான்ஸ் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எம்ஜிஆர், சிவாஜி, கமல் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுட்டா ஜூலி! கஞ்சா கருப்பு

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றபட்ட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு தனது அனுபவங்களை பேட்டி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்

போதை மருந்து விவகாரம்: பிரபல நட்சத்திரங்களுக்கு குறிக்கப்பட்ட தேதிகள்

ஐதராபாத்தில் சமீபத்தில் போதைப் பொருள் சிக்கிய விவகாரம் குறித்து தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் 11 பேருக்கு விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது குறித்து வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

அரசு பள்ளியில் ஐஏஎஸ் அதிகாரியின் மகள்: குவியும் பாராட்டுக்கள்

தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. தொண்டுள்ளம் கொண்ட ஆசிரியர்கள் சிலர் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து டிஜிட்டல் வகுப்பறைகளாக மாற்றி வருவது குறித்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்...

தேவைதகளுடன் வாழ்ந்த சினேகனுக்கு தேவையா இது?

தனியார் தொலைகாட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு எந்த அளவுக்கு நேயர்களின் சப்போர்ட் இருக்கின்றதோ, அதே அளவுக்கு ஒருசிலரை நேயர்கள் அதிகளவில் வெறுத்து வருகின்றனர். அவர்களில் ஒருவராக சினேகன் உள்ளார் என்பது சமூகவலைத்தள பதிவுகளில் இருந்து தெரிய வருகிறது....

பல்சர் சுனில் ஏற்கனவே இன்னொரு நடிகையை கடத்தியவரா? அதிர்ச்சி தகவல்

பிரபல மலையாள நடிகை கடந்த சில மாதங்களுக்கு முன் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில் முக்கிய குற்றவாளியாக பல்சர் சுனில் கைது செய்யப்பட்டுள்ளார்