சென்னையில் 'விவேகம்' செய்த புதிய சாதனை

  • IndiaGlitz, [Monday,August 28 2017]

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த வியாழன் அன்று வெளியான 'விவேகம்' படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்தபோதிலும் இந்த படத்தின் ஓப்பனிங் வசூலை இந்த விமர்சனங்கள் எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதற்கு பாக்ஸ் ஆபீஸ் வசூல் விபரங்களே சாட்சியாக உள்ளது.

சென்னையில் கடந்த வார இறுதி நாட்களில் இந்த படம் 22 திரையரங்குகளில் 889 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.4,45,34,223 வசூல் செய்துள்ளது. சென்னையில் இந்த வசூல் ஒரு புதிய சாதனை ஆகும். மேலும் திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வெளியான ஆகஸ்ட் 24 முதல் நேற்று வரையிலான 4 நாட்களில் சென்னையில் ரூ.5,67,32,498 வசூல் செய்துள்ளதே நெகட்டிவ் விமர்சனத்தை மீறி வெற்றி பெற்றதற்கு சாட்சியாக உள்ளது. 4 நாட்களில் எந்த படமும் இதுவ்ரை இந்த வசூலை பெறவில்லை என்பதால் இதுவொரு சாதனையாக பதிவு செய்யப்படுகிறது.

More News

விஜயகாந்த் வீட்டுக்கு வந்த புதிய விருந்தினர் யார் தெரியுமா?

கேப்டன் விஜயகாந்த் தற்போது தீவிர அரசியலில் இல்லாதபோதிலும் அவ்வப்போது மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு இன்று முதல் ஒரு புதிய விருந்தினர் வந்துள்ளர்...

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் பரபரப்பு நடிகை

கோலிவுட் திரையுலகில் அதிக படங்களில் நடித்தும், அதிக வெற்றிகளை கொடுத்து வரும் நடிகர் விஜய்சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' நல்ல வெற்றியை பெற்ற நிலையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி இவர் நடித்த மற்றொரு படமான 'புரியாத புதிர்' படம் வெளியாகவுள்ளது...

பிக்பாஸ் வீட்டில் ரைசா புரிந்து கொண்ட உண்மை

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று ரைசா வெளியேறினார். நேற்றைய ரைசாவின் எவிக்சன் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது...

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஜூலி-ஆர்த்தி?

பிக்பாஸ் வீட்டில் நேற்று ரைசா வெளியேறிவிட்டதால் தற்போது வீட்டின் உள்ளே புதிய வரவுகள் நான்கு பேர், பழைய பங்கேற்பாளர்கள் நான்கு பேர் என எட்டு பேர் உள்ளனர். இந்த நிலையில் இன்று மீண்டும் இரண்டு புதிய வரவுகள், இல்லை பழைய பங்கேற்பாளர்கள் பிக்பாஸ் வீட்டில் செல்லவுள்ளனர்...

இந்த கோபத்தை அரசியல்வாதிகளிடம் காட்டுங்கள்: கமல்ஹாசன் ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் கமல்ஹாசன் அவ்வப்போது சமயம் கிடைக்கும் போதெல்லாம் அரசியல் குறித்து மறைமுகமாகவும், நேரடியாகவும் பேச தவறுவதில்லை என்பது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரிந்ததே...