'அஜித் 57' படத்தின் டைட்டில் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Tuesday,August 23 2016]

அஜித் நடித்து வரும் 57வது படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு தற்போது ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
இந்த படத்திற்கு 'துருவன்' என்ற டைட்டில் வைக்கப்படவுள்ளதாக படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. 'துருவன்' என்பது மகாபாரத்தில் உள்ள கேரக்டர் என்பதும் இந்த பெயருக்கு வெற்றியாளர் என்று பொருள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தல 57 படத்திற்கு பல டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றில் ஒன்றுதான் 'துருவன்' என்றும் டைட்டில் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.