ரஜினிக்கு அடுத்த இடத்தில் அஜீத். பிரபல தயாரிப்பாளர் கருத்து

  • IndiaGlitz, [Monday,September 28 2015]

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என பல ஊடகங்கள் அவ்வப்போது பல கருத்துக்கணிப்புகள் எடுத்து பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். மேலும் இதுகுறித்து சமூக வலைத்தளங்களிலும் பல விவாதங்கள் நடந்து வரும் நிலையில் பிரபல கன்னட தயாரிப்பாளர் ஒருவர் ரஜினிக்கு இணையான நடிகர் யார்? என்பது குறித்து தனது கருத்தை சமீபத்தில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கர்நாடகாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்து வரும் கே.மஞ்சு சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியபோது, "நான் பல வருடங்களாக தமிழ் திரையுலகை கூர்ந்து கவனித்து வருகிறேன். நான் பார்த்தவரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெற்றிருக்கும் மதிப்புக்கும் மரியாதைக்கும் எந்த விதத்திலும் அஜீத் குறைந்தவர் இல்லை என்றே நினைக்கின்றேன். அதுமட்டுமின்றி ரஜினிக்கு அடுத்தபடி கர்நாடகத்தில் மாபெரும் ஓப்பனிங் கொடுப்பது அஜீத் படங்கள் மட்டுமே' என்று கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தயாரிப்பாளர் மஞ்சுவின் இந்த பேட்டியை தொடர்ந்து அஜீத் ரசிகர்கள் உற்சாகமாகி இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.