'அண்ணாத்த' பட வாய்ப்பு கிடைக்க அஜித் தான் காரணம்: இயக்குனர் சிவா
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததற்கு அஜித் தான் காரணம் என இயக்குனர் சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார்.
சன் டிவியில் ’அண்ணாத்த’ படத்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. இந்த நிகழ்ச்சியில் குஷ்பு, மீனா, சூரி, சிறுத்தை சிவா, டி இமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சிவா பேசும்போது, ’அண்ணாத்த’ திரைப்படத்தின் வாய்ப்பு எனக்கு கிடைக்க அஜித் தான் காரணம் என்றும் அதற்காக நான் அஜித்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
அஜித் நடித்த ’விஸ்வாசம்’ திரைப்படத்தை பார்த்த பின்னர் ரஜினிகாந்த் அவர்கள் என்னை அழைத்து நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று கூறினார். எனவே ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்த அஜித்துக்கு நான் மீண்டும் நன்றி சொல்கிறேன் என்று கூறிக்கொண்டார்.
மேலும் சிறுவயதிலிருந்தே தான் ரஜினி அவர்களின் தீவிரமான ரசிகர் என்றும், ரஜினியின் ஒவ்வொரு படத்தையும் முதல் நாள் முதல் காட்சியை நான் கண்டிப்பாக பார்ப்பேன் என்றும், ரஜினி அவர்களின் படங்கள் வெறும் சந்தோஷத்தை மட்டும் தருவதில்லை பெரிய நம்பிக்கையையும் எனர்ஜியையும் கொடுக்கும் என்றும், அதற்காகவே நான் சிறுவயதிலிருந்து ரஜினிகாந்த் படத்தை பார்ப்பேன் என்று அந்த பேட்டியில் இயக்குனர் சிவா கூறியுள்ளார்.
நடிகை குஷ்பு அவர்களும் நடிகை மீனா அவர்களும் ஒரே மேடையில்!
— Sun TV (@SunTV) November 6, 2021
அண்ணாத்த | சிறப்பு நிகழ்ச்சி
Watch full episode on SUNNXT
#SunTV #AnnaattheSirappuNigazhchi #AnnaattheSirappuNigazhchiOnSunTV pic.twitter.com/FfijHQyyLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com