அஜித்துக்கு பாராட்டு தெரிவித்த த்ரிஷா!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் ஒரு ரீமேக் படம் என்பதாலும், இந்த படத்தின் கரு தென்னிந்தியாவுக்கு பொருந்தாது என்றும் பலர் ரிலீசுக்கு முன்னர் நெகட்டிவ் விமர்சனம் செய்தனர். ஆனால் நெகட்டிவ் விமர்சகர்களின் வாயை அடைக்கும் அளவுக்கு இந்த படம் சூப்பர் வசூலை வாரி வழங்கியது.
இந்த நிலையில் இன்று யுனிசெப் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற நடிகை த்ரிஷா செய்தியாளர்களிடம் பேசியபோது, நேர் கொண்ட பார்வை படம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 'நேர் கொண்ட பார்வை' போன்ற படங்களில் அஜித் நடித்தது சூப்பர். அவரை நான் பாராட்டுகிறேன். எனக்கு அஜித்தை ரொம்ப பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.
மேலும் த்ரிஷா நடித்த '96' திரைப்படம் தேசிய விருதை வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த படம் ஒரு விருதை கூட பெறவில்லை. இதுகுறித்த கேள்விக்கு, '96 படத்துக்கு ஏன் விருது கிடைக்கவில்லை என்பதை நீங்களே சொல்லுங்கள்' என்று தெரிவித்தார்.
மேலும் சினிமா என்பது ஒரு கற்பனை என்றும், சினிமாவை சீரியஸ்காக எடுத்து கொள்ள கூடாது என்றும் சினிமாவை பின்பற்ற கூடாது என்றும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும், சமூக வலைத்தளங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தானவை என்று கூறிய த்ரிஷா, 'பாலியல் குற்றங்களுக்கு அரபு நாடுகளில் உள்ளது போன்ற உடனடி தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments