அஜித் தான் என் முதல் காதலர்: பிரபல நடிகையின் பேட்டியால் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,December 08 2018]

கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் அஜித்துடன் ஒரு படத்திலாவது பணிபுரிய வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது தெரிந்ததே. அஜித்தை நடிகர் என்ற வகையில் மட்டுமின்றி நல்ல மனிதர் என்ற வகையில் அவரை அனைவரும் விரும்புவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பார்வதி, தான் பள்ளிப்பருவத்தில் இருந்தபோதே அஜித்தை மனதுக்குள் காதலித்ததாகவும், அதுதான் தனது முதல் காதல் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பள்ளி பருவத்தில் மனதுக்குள் காதலித்த அஜித்துடன் ஒரு படத்தில் நடித்துவிட்டேன் என்பதே தனக்கு பெருமையாக இருப்பதாகவும் அவர் தனது பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார். நடிகை பார்வதி கொடுத்துள்ள அனைத்து பேட்டிகளிலும் அஜித் குறித்தும் அவருடன் நடித்த 'என்னை அறிந்தால்' படம் குறித்தும் பேசாமல் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

விஷால் படப்பிடிப்பு திடீர் ரத்து: பல லட்சங்கள் நஷ்டமானதாக தகவல்

விஷால் நடித்து வரும் ;அயோக்யா' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹீரோவாகும் மற்றொரு பிக்பாஸ் போட்டியாளர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் திரைத்துறையில் வாய்ப்புகள் பெற்று ஜொலித்து

'விஸ்வாசம்' படத்தின் புதிய அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்

வரும் பொங்கல் தினத்தன்று ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் திடீர் மாயம்: நடந்தது என்ன?

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை திடீரென காணவில்லை என அவரது மனைவி சென்னை அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்து அதன் பின் சிலமணி நேரங்களில் புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உன்னை வெல்ல யாரும் இந்த மண்ணில் இல்லை: 'கனா' பாடல் விமர்சனம்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படம் வரும் 21ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை நாளில் வெளியாகவுள்ள நிலையில்