அஜித் அரசியலுக்கு வருவார், சிம்புவுக்கு வாயாடி பெண் தான் கிடைக்கும்: பெண் சித்தரின் கணிப்பு

  • IndiaGlitz, [Monday,August 31 2020]

அஜித் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றும் சிம்புவுக்கு வாயாடி பெண்தான் மனைவியாகக் கிடைப்பார் என்றும் பெண் சித்தர் லட்சுமி அம்மாள் என்பவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண் சித்தர் லட்சுமி அம்மாள் என்பவர் அவ்வப்போது பரபரப்பாக பேட்டி கொடுத்து வருபவர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த லட்சுமி அம்மாள் திரை உலகினர் குறித்து தனது கருத்தை கூறியுள்ளார். சிம்பு மிகவும் நல்லவர் என்றும், குழந்தை மாதிரி தனக்கு இப்படித்தான் ஒரு மனைவி வர வேண்டும் என்று தேடி வருகிறார் என்றும், ஆனால் அவரது ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் தோஷம் நிவர்த்தி செய்தால் கண்டிப்பாக அழகான பெண் கிடைக்கும் என்றும், ஆனால் அந்த பெண் வாயாடி பெண்ணாகத் தான் இருப்பார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் ஒரு ஆன்மீகவாதி என்றும், இதுதான் பாதை என்று அவர் செல்லாமல், கிடைக்கும் பாதையில் செல்வார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அஜித் அன்புக்கு ஏங்குபவர் என்றும் அன்பினால்தான் அவர் ஷாலினியை திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறிய லட்சுமி அம்மாள், அஜித் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றும் கூறினார்.

இதேபோல் ஜெயலலிதா மற்றும் நித்தியானந்தா குறித்தும் அவர் பரபரப்பான கருத்துக்களை தனது பேட்டியில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வடிவேலு காமெடிக்கே டஃப்… 5 கணவன்களை உதறிவிட்டு… 6 ஆவது கணவருடன் காவல் நிலையம் வந்த பெண்!!!

அர்ஜுன் நடித்த மருதமலை படத்தில் போலீஸ் ஏட்டாக நடித்து இருக்கும் வைகைப் புயல் வடிவேலுவிடம் உதவிக்கேட்டு ஒரு பெண் காவல் நிலையத்திற்கு வருவார்.

உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றியை தெரிவித்து கொள்கிறேன்: விஷால்

பிரபல நடிகர் விஷாலின் பிறந்தநாள் முன் தினம்சிறப்பாக கொண்டாடப்பட்டதை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிரடி காட்டும் முதல்வர்!!! ரேஷன் பொருட்களை வீட்டுக்கே அனுப்ப புதியத் திட்டம்!!!

நியாய விலைக்கடைகளில்  வழங்கப்படும் பொருட்களை நேரடியாக பொது மக்களின் வீட்டிற்கே கொண்டுவரும் வகையிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என முதல்வர்

இன்னும் இருக்கு… சீனாவுக்கு எதிராக இந்தியாவின் அடுத்த பிளான்!!! என்ன தெரியுமா?

தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் கடந்த 2009 முதல் தீவிரம் அடைந்து வருகிறது.

இது தீப்பிடித்த காடு, பறவைகளே! பத்திரம்: ஊரடங்கு தளர்வு குறித்து வைரமுத்து!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. பேருந்து