அஜித் ஒரு இண்டீரியர் டிசைனர் என்பது யாருக்காவது தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,August 23 2017]

அஜித் ஒரு நடிகர், போட்டோகிராபர், பிரியாணி பிரியர், பைக் ரைடர் என்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால் அவர் ஒரு மிகச்சிறந்த இண்டீரியர் டிசைனர் என்பது பலருக்கு தெரியாத உண்மை.

சமீபத்தில் ஒரு ஸ்டண்ட் இயக்குனரின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவருடைய வீடு முற்றிலும் சேதம் அடைந்ததோடு அவர் ஆசை ஆசையாய் வளர்த்த இரண்டு நாய்களும் தீக்கிரையாகின.

இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட அஜித், அந்த ஸ்டண்ட் இயக்குனர் புதியதாக கட்டிய வீட்டிற்கு செங்கல், சிமிண்ட், மணல் ஆகியவை வாங்கி கொடுத்தார். அதுமட்டுமின்றி வீட்டின் அனைத்து இண்டீரியர் டிசைனையும் அவரே முன்னின்று ஐடியா கொடுத்தார். அப்போதுதான் அந்த ஸ்டண்ட் இயக்குனருக்கு அஜித் ஒரு சிறந்த இண்டீரியர் டிசைனர் என்பது தெரியவந்தது. அஜித்தின் மிகப்பெரிய உதவி மற்றும் இண்டீரியர் டிசைன் குறித்த அறிவு உண்மையில் பெருமைப்படக்கூடியதே..

More News

நடிகை ராதிகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாரிசும் பிரபல நடிகையுமான ராதிகாவுக்கு இன்று பிறந்த நாள். இன்றைய பிறந்த நாள் அவருக்கு சந்தோஷமான நாளாக இருக்க வேண்டும் என்று அவரை IndiaGlitz சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

வலிய வந்து வம்பில் மாட்டிக்கொண்ட காயத்ரி

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டாலும் காயத்ரியை இன்னும் ஓவியா ஆர்மியினர் மன்னிக்கவும் இல்லை, மறக்கவும் இல்லை.

முதல்வரை மாற்ற வேண்டும்: சி.ஆர்.சரஸ்வதி

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு மாநிலத்தின் முதல்வரை எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்வார்கள்...

ரிலீசுக்கு முன்பே ரூ.120 கோடி வசூல்: சாதனை செய்த அஜித்தின் 'விவேகம்'

கோலிவுட் திரையுலகில் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகி அந்த படம் ரூ.100 கோடி வசூல் செய்தாலே மிகப்பெரிய வெற்றியாக கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரிலீசுக்கு முன்பே ரூ.120 வியாபாரம் ஆகி அஜித்தின் 'விவேகம்' புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது...

டிடிவி தினகரனுடன் நடிகர் விஷால் திடீர் சந்திப்பு

சமீபத்தில் நடந்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தினகரன் ஆதரவாளர்கள் எந்த நேரத்திலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கவிழ்க்கவோ அல்லது முதல்வரை மாற்றவோ செய்யும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது...