நானும் ஒரு நாள் அஜித் போல் மாறுவேன்: மீராமிதுன் ஆவேசம்

  • IndiaGlitz, [Sunday,August 02 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், நடிகர் சூர்யா, நடிகை த்ரிஷா உள்பட பலரை சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நடிகை மீரா மிதுன், அஜித் குறித்து பெருமையாக குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அஜித்துடன் தான் நடித்து இருந்ததாகவும் ஆனால் அந்த காட்சிகளை நீக்கும்படி த்ரிஷாதான் தயாரிப்பு மற்றும் இயக்குனர் தரப்பிடம் கூறியதாகவும் இதனால் தன்னுடைய காட்சிகள் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறியுள்ளார். அஜித்திடம் தான் இதுகுறித்து முறையிடவில்லை என்றும் ஏனெனில் இந்த படத்தில் தன்னுடைய காட்சிகள் இல்லை என்பது படம் ரிலீசான பிறகுதான் தனக்கு தெரியும் என்றும் அவர் கூறினார். எதற்காக ஒரு நடிகையின் நேரம் மற்றும் தயாரிப்பாளர்கள் பணத்தை வீணாக்குகிறார்கள் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் கோலிவுட் திரையுலகின் மாபியா கும்பலால் அஜித் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார் என்றும் அவரது திரையுலக பயணம் என்பது எளிமையானது இல்லை என்றும் அவரைப் போலவே எனக்கும் கோலிவுட் திரையுலகில் அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஆனால் அஜித்தைப் போலவே நானும் ஒருநாள் இவற்றையெல்லாம் வென்று மிகப்பெரிய அளவில் வருவேன் என்றும் அவர் கூறியுள்ளார்

மேலும் அஜித் ஒரு பக்கா ஜென்டில்மேன் என்றும் அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளது என்றும் இவ்வளவுக்கும் அவர் எந்த ஒரு படத்தின் புரமோஷனுக்கும் சென்றதில்லை என்றும் மீராமிதுன் கூறினார். நெப்போடிஸத்தில் இருந்து தப்பித்து வெற்றி பெற்ற ஒரே நடிகர் அஜித் மட்டுமே என்றும் அவரையே தான் பின்பற்ற உள்ளதாகவும் மீராமிதுன் கூறியுள்ளார். மீராமிதுனின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

முதல்வர் மகன் குறித்த விமர்சனம்: பிரபல நடிகையின் வீட்டில் நடந்த துப்பாக்கி சூட்டால் பரபரப்பு

முதலமைச்சரையும் முதலமைச்சர் மகனையும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

அபிராமி திரையரங்க உரிமையாளருக்கு மத்திய அரசு செய்த கெளரவம்!

இந்தியாவில் சாதனை செய்த பலரது உருவம் பதித்த தபால் தலைகள் அவ்வப்போது வெளியிட்டு வரும் நிலையில் தற்போது சென்னை அபிராமி திரையரங்க உரிமையாளர் ராமநாதன்

என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை காதலித்த காய்கறி வியாபாரி: மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் பரபரப்பு!

தர்மபுரி அருகே இளைஞர் ஒருவர் பெங்களூருவில் காய்கறி வியாபாரம் செய்து வந்த நிலையில் அங்குள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவரை காதலித்ததாகவும்,

தேர்தல் முன்விரோதம் காரணமாக பயங்கர கலவரம்: வீடுகள், படகுகள் தீவைக்கப்பட்டதால் பரபரப்பு

தேர்தல் முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் சகோதரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை அடுத்து கடலூர் அருகே 25க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் வீடுகள் தீ

சென்னையில் ஆகஸ்ட் 31 வரை 144 தடை உத்தரவு: காவல்துறை ஆணையர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஆறாம் கட்ட ஊரடங்கு முடிவடைந்து இன்று முதல் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆரம்பமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது