அஜித் ஒரு மகாத்மா: பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி வயதான போட்டியாளராக இருந்தாலும் இளமையான போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சமயோசிதமாக விளையாடி வருகிறார். தந்திரமாகவும் புத்திசாலித்தனமாகவும் அவர் விளையாடி வருவது சக போட்டியாளர்கள் சமாளிக்க முடியாத வகையில் உள்ளது
இந்த நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தியின் பழைய பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் அஜித்தின் புகைப்படத்தை காட்டி பேட்டி எடுப்பவர் ஒரு கேள்வி கேட்க, அதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி ’அஜித் ஒரு மகாத்மா’ என்றும், மகாத்மா என்ற டைட்டிலுக்கு பொருத்தமானவர் அஜித் மட்டுமே என்றும் கூறினார்
சிலர் செய்கையால் அவர்கள் நல்லவர்கள் என்பது நமக்கு தெரிய வரும். ஆனால் அஜித் வரும்போதே அவரிடம் ஒரு பிரகாசம் ஏற்படும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற வகையில் அவர் முகத்தை பார்த்தாலே அவர் நல்லவர் என்பதை கண்டுபிடித்துவிடலாம்
திரையுலகில் உள்ள யாரிடம் கேட்டாலும் அஜித்தை பற்றி ஒருவர் கூட தவறாக சொல்ல மாட்டார்கள். அவர் பெரிய ஸ்டாராக இருந்தாலும் அவரது எளிமைதான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அஜித்தை நான் ஒரு நிகழ்ச்சிக்காக இயக்கியுள்ளேன். ரேடான் நிறுவனம் தயாரித்த ஒரு தீபாவளி நிகழ்ச்சியின் போது அவரை நான் இயக்கியிருக்கிறேன். அப்போது அவர் என்னிடம் நிறைய பேசியுள்ளார். குழந்தை போல் கள்ளங்கபடம் இல்லாமல் பேசினார்.
மேலும் அவருடன் ஒரு படமும் நான் நடித்துள்ளேன். பின்னர் இரண்டாவதாக ஒரு படத்தில் நாங்கள் இருவரும் நடிக்க ஒப்பந்தமான நிலையில் எங்கள் இருவரையும் அந்த படத்தில் இருந்து தூக்கி விட்டனர் என்று அஜித் குறித்த தனது மலரும் நினைவுகளை அந்த பேட்டியில் சுரேஷ் சக்கரவர்த்தி கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
Throwback :
— Ajith Seenu 2 ?? தல..தாய்..தாரம்..²⁸ʸʳˢᴼᶠᴬʲⁱᵗʰⁱˢᵐ (@ajith_seenu) October 27, 2020
Actor & Big Boss 4 Contestant Suresh Charavarthi Sir Talking About Our #ThalaAjith ... #Valimai pic.twitter.com/UGtqVoxEnF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments