close
Choose your channels

தல அஜித்தின் 'விசுவாசம்' படப்பிடிப்பு எப்போது? வெளிவராத தகவல்

Friday, February 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள திரைப்படத்தின் டைட்டில் 'விசுவாசம்' என கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டாலும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை

அஜித், நயன்தாரா, யோகிபாபு, இமான், உள்பட முக்கிய படக்குழுவினர்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படம் வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கப்படவுள்ளது. திட்டமிட்டதை விட தாமதமாக படப்பிடிப்பு தொடங்கப்பட்டாலும் இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியிடுவதில் படக்குழுவினர் உறுதியாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை விமான நிலையம் அருகில் உள்ள பின்னி மில்லில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பின்னிமில்லில் பெரும்பாலும் சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்புதான் நடைபெறும் என்பதால் முதல்கட்ட படப்பிடிப்பே சண்டைக்காட்சிகளுடன் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment