தூக்குத்துரைன்னா அடாவடி: 'விஸ்வாசம்' மோஷன் போஸ்டர் விமர்சனம்

  • IndiaGlitz, [Sunday,November 25 2018]

அஜித் நடித்த விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாததால் ஒரு கட்டத்தைல் அஜித் ரசிகர்கள் பொங்கி எழ தொடங்கிவிட்டனர்.

'விஸ்வாசம்' படத்திற்கு பின்னர் ஆரம்பித்த 'பேட்ட' படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு பர்ஸ்ட்லுக், பர்ஸ்ட்சிங்கிள், செகண்ட் சிங்கிள், ஆடியோ தேதி, ரிலீஸ் தேதி என அடுத்தடுத்த அப்டேட்டுக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் 'விஸ்வாசம்' படத்தின் எந்த அப்டேட்டும் வராததால் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்

இந்த நிலையில் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் சற்றுமுன் விஸ்வாசம்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அட்டகாசமான இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

தூக்குத்துரைன்னா அடாவடி, தூக்குத்துரைன்னா அலப்பரை, தூக்குத்துரைன்னா தடாலடி, தூக்குத்துரைன்னா கட்டுக்கடங்காத கிராமத்து காட்டு அடி, என்ற வசனத்தின் பின்னணியில் அட்டகாசமான அஜித்தின் இரண்டு கெட்டப்புகள் இந்த மோஷன் போஸ்டரில் உள்ளது. மேலும் இந்த படம் பொங்கல் ரிலீஸ் என்பதும் இந்த மோஷன் போஸ்டரில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

More News

'தளபதி 63' படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள 'தளபதி 63' படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டு இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டது.

எது பேசறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு பேசு: 'கனா' டிரைலர் விமர்சனம்

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள முதல் படமான 'கனா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

முரட்டு உருவம், மழலை உள்ளம்: அம்பரீஷூக்கு கமல் இரங்கல்

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் நேற்று உடல்நலக்கோளாறு காரணமாக காலமானதை அடுத்து கன்னட திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

பற்றி எரியும் பாரீஸ்: போர்க்களமான பெட்ரோல் விலை உயர்வு போராட்டம்

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தால் அந்நாட்டின் தலைநகர் பாரீஸ் போர்க்களம் போல் காட்சி அளிக்கின்றது.

கஜா புயல் நிவாரண நிதி: அஜித் கொடுத்த தொகை குறித்து தமிழக அரசு அறிவிப்பு

கஜா புயல் நிவாரணமாக முதல்வரின் நிவாரண நிதிக்கு தல அஜித் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.