ஒருவழியாக வந்துவிட்டது 'விடாமுயற்சி' அப்டேட்.. இன்ப அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Saturday,June 29 2024]

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார்.

‘விடாமுயற்சி’ படத்தின் அறிவிப்பு வெளியாகி இரண்டு வருடங்கள் ஆன பின்னரும் 70 முதல் 80 சதவீத படப்பிடிப்பு தான் இன்னும் முடிவடைந்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஒரு வழியாக இந்த படத்திற்கு இருந்த சில பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு தற்போது அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜூலை இரண்டாம் வாரத்திற்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகளை தொடங்கி வரும் தீபாவளி அன்று இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘விடாமுயற்சி’ அப்டேட் கேட்டு பல மாதங்களாக அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது நாளை இரவு 7.03 ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் வெளியிட இருப்பதாக சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். ஒரு வழியாக ‘விடாமுயற்சி’ அப்டேட் வெளிவர தொடங்கி விட்டால் அடுத்தடுத்து ஆச்சரியப்படும் அப்டேட்டுகள் வரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று ஆகும்.

More News

33 வயது தமிழ் நடிகைக்கு இன்று திருமணம்.. வைரல் புகைப்படங்கள்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

33 வயது தமிழ் நடிகைக்கு இன்று திருமணம் நடந்துள்ளதை அடுத்து திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அஜர்பைஜான் டூ தென்னாபிரிக்கா.. சுரேஷ் சந்திரா கொடுத்த சூப்பர் அப்டேட்.. அஜித் ரசிகர்கள் குஷி..!

நடிகர் அஜித் தற்போது 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பதும் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வரும் இந்த படப்பிடிப்பில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சில முக்கிய காட்சிகள்

4 லட்சம் முதல் 150 கோடி வரை.. 10 ஆண்டுகளில் பிரபாஸின் அசுர வளர்ச்சி..!

பிரபாஸ் தனது முதல் படத்தில் வெறும் 4 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய நிலையில் 10 ஆண்டுகளில் அவர் அசுர வளர்ச்சி அடைந்து தற்போது இந்தியாவின் முன்னணி நடிகராக உள்ளார் என்பதும்

ஆம், எனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உண்மைதான்.. 36 வயது நடிகையின் அதிர்ச்சி அறிவிப்பு..!

36 வயது நடிகைக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவிய நிலையில் அந்த நடிகை 'ஆம் எனக்கு மார்பக

பணத்தை மொத்தமாக ஏமாந்து நிற்கும் மனோஜ்.. ஞாயிறு அன்று 2 மணி நேரம் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' ப்ரோமோ ..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியல் வரும் ஞாயிறு அன்று இரண்டு மணி நேரம் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.