close
Choose your channels

அஜித்தின் 'விடாமுயற்சி' டீசர் தேதி இதுவா? ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Tuesday, October 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, நேற்று இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதும், இதற்கான பூஜை பற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனதும் தெரிந்தது.

இந்த நிலையில், அடுத்த கட்டமாக, இந்த படத்தின் ஒரு அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தின் டீசர் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுவதால், ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். விரைவில் இதற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் ‘விடாமுயற்சி’ பற்றிய அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம், ’குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் கிறிஸ்துமஸ் திருநாளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே, அஜித்தின் ’குட் பேட் அக்லி’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில், நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment