அஜித் சென்ற கார் அந்தரத்தில் சுழன்றதால் பரபரப்பு.. 'விடாமுயற்சி' படப்பிடிப்பின் திகில் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அஜித் உட்பட பலர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கும் நிலையில் த்ரிஷா மற்றும் அர்ஜூன் விரைவில் படப்பிடிப்பில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சற்றுமுன் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அஜித் மற்றும் ஆரவ் காருக்குள் உட்கார்ந்து இருக்கும் நிலையில் அந்த கார் கிரேன் உதவியால் அந்தரத்தில் தூக்கப்படுகிறது. அன்பின் ஒரு கட்டத்தில் அந்தரத்திலேயே கார் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் அஜித் மற்றும் ஆரவ் காரின் உள்ளிருக்கும் காட்சியை பார்க்கும்போது திகில் அடைய வைக்கிறது.
அதன் பின்னர் மீண்டும் கார் சுழன்று கொண்டே கீழே இறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு வரும் நிலையில் அஜித் மற்றும் ஆரவ் காரில் இருந்து இறங்கும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது. இந்த காட்சி சூப்பராக படமாக்கப்பட்டதை அடுத்து படக்குழுவினர் கைதட்டி மகிழ்ச்சி அடையும் காட்சி அந்த வீடியோவில் உள்ளன.
மூன்று வீடியோக்கள் கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள் இருக்கும் நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக் கமெண்ட் குவிந்து வரும் நிலையில் டூப் இல்லாமல் அஜித் நடித்த இந்த காட்சியை பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The big update #vidaamuyarchi shoot resumes #Azerbaijan.
— Suresh Chandra (@SureshChandraa) June 24, 2024
#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran@trishtrashers @akarjunofficial@anirudhofficial @ReginaCassandra @Aravoffl #OmPrakash @DoneChannel1 @vidaamuyarchii
@gopiprasannaa pic.twitter.com/pQ33FDUXCS
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments