அஜித் சென்ற கார் அந்தரத்தில் சுழன்றதால் பரபரப்பு.. 'விடாமுயற்சி' படப்பிடிப்பின் திகில் வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,June 24 2024]

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அஜித் உட்பட பலர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கும் நிலையில் த்ரிஷா மற்றும் அர்ஜூன் விரைவில் படப்பிடிப்பில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அஜித் மற்றும் ஆரவ் காருக்குள் உட்கார்ந்து இருக்கும் நிலையில் அந்த கார் கிரேன் உதவியால் அந்தரத்தில் தூக்கப்படுகிறது. அன்பின் ஒரு கட்டத்தில் அந்தரத்திலேயே கார் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் அஜித் மற்றும் ஆரவ் காரின் உள்ளிருக்கும் காட்சியை பார்க்கும்போது திகில் அடைய வைக்கிறது.

அதன் பின்னர் மீண்டும் கார் சுழன்று கொண்டே கீழே இறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு வரும் நிலையில் அஜித் மற்றும் ஆரவ் காரில் இருந்து இறங்கும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது. இந்த காட்சி சூப்பராக படமாக்கப்பட்டதை அடுத்து படக்குழுவினர் கைதட்டி மகிழ்ச்சி அடையும் காட்சி அந்த வீடியோவில் உள்ளன.

மூன்று வீடியோக்கள் கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள் இருக்கும் நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக் கமெண்ட் குவிந்து வரும் நிலையில் டூப் இல்லாமல் அஜித் நடித்த இந்த காட்சியை பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சனி வக்ர பெயர்ச்சி 2024 பலன்கள் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் கணிப்பு..!

சனி வக்ர பெயர்ச்சி 2024 பலன்கள் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் கணிப்பு..!

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வாராவாரம் ஆரவாரம் செய்து வரும் உப்பு புளி காரம்!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், சமீபத்தில் வெளியான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'உப்பு புளி காரம்', குடும்பங்கள் கொண்டாடும் அனைத்து அம்சங்களுடன்,

கள்ளச்சாராய நேரத்தில் பாட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட பா ரஞ்சித்.. அடுத்த பட அறிவிப்பு..!

தமிழகத்தில் ஒரு பக்கம் கள்ளச்சாராய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மது பாட்டிலுடன் கூடிய தனது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா ரஞ்சித் தனது சமூக வலைதளத்தில்

காதலில் விழுந்து விட்டாரா நடிகை நிவேதா தாமஸ்? வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்..!

நடிகை நிவேதா தாமஸ் தான் காதலில் விழுந்து விட்டது போன்ற மறைமுகமாக பதிவை தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

10 ஆண்டுகளுக்கு பின் ஒரு சந்திப்பு.. ஒரே முத்தமழை.. நயன்தாரா பதிவு செய்த எமோஷனல் புகைப்படங்கள்..!

நடிகை நயன்தாரா 10 ஆண்டுகளுக்கு பின் தனது தோழியை சந்தித்து, கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள்