அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தின் முதல் பிசினஸ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முதல் பிசினஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருவதாகவும் வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சற்றுமுன் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தலைமை சமூக வலைதளத்தில் ‘விடாமுயற்சி’ படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனை அடுத்து திரையரங்க ரிலீசுக்கு பின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ‘விடாமுயற்சி’ படத்தின் ஹிந்தி ஓடிடி ரிலீஸ் உரிமை குறித்த வியாபாரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
அஜித், த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணியை செய்து வருகின்றனர்.
You know it's going to be electrifying when it comes to AK ⚡#VidaaMuyarchi is coming soon on Netflix in Tamil, Telugu, Malayalam, Kannada after theatrical release!#NetflixPandigai pic.twitter.com/1NIVzKMyqS
— Netflix India South (@Netflix_INSouth) January 17, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments