'விடாமுயற்சி' படத்தின் அடுத்த இரு கட்ட படப்பிடிப்பு எங்கே? 

  • IndiaGlitz, [Tuesday,February 06 2024]

அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் மற்றும் பல்கேரியா நாடுகளில் நடந்து வந்த நிலையில் அடுத்த கட்டமாக வட இந்தியாவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித்தின் ’விடாமுயற்சி’ அடுத்த கட்ட படப்பிடிப்பு வட இந்தியாவில் நடைபெற இருப்பதாகவும் அதனை அடுத்து புனேவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

புனே படபிடிப்புடன் சேர்த்து மொத்தம் 30 நாட்கள்தான் படப்பிடிப்பு மீதி இருப்பதாகவும் மார்ச் இறுதிக்குள் இந்த படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் அதன் பிறகு போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை விறுவிறுப்பாக செய்து கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ், ப்ரணவ் மோகன்லால் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில், நீரவ் ஷா ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.