close
Choose your channels

'விடாமுயற்சி' படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் செல்லும் அஜித்.. இணையும் 2 முன்னணி நடிகைகள்..!

Wednesday, June 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் ஜூன் 7ஆம் தேதியுடன் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அஜித் இதே படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு செல்வாரா? அல்லது ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்புக்கு செல்வாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் சற்று முன் அதற்கான விடை கிடைத்துள்ளது.

’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தான் இன்னும் சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும் அதற்காக அஜித் மற்றும் படக்குழுவினர் அஜர்பைஜான் செல்ல இருப்பதாகவும் அங்கு சுமார் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அஜித்துடன் த்ரிஷா மற்றும் ரெஜினா ஆகிய இருவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் மூவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் அதிரடி ஸ்டண்ட் காட்சி, ஒரு பாடல் காட்சி படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

ஜூன் 20ஆம் தேதி முதல் அஜர்பைஜானில் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பிறகு சென்னை திரும்பும் அஜித், ’குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் செல்ல இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment