close
Choose your channels

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. 'விடாமுயற்சி' படத்தில் இந்த பிரபலம் சிறப்பு தோற்றமா?

Friday, July 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் அஜித், வெங்கட் பிரபு மற்றும் த்ரிஷா ஆகிய மூவரும் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியது.

மீண்டும் நீண்ட இடைவேளைக்கு பிறகு ’மங்காத்தா’ கூட்டணி சேர்ந்திருப்பதை அடுத்து ’மங்காத்தா 2’ படம் குறித்த பேச்சுவார்த்தை நடந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. அது மட்டும் இன்றி விஜய்யின் ’கோட்’ திரைப்படத்தில் அஜித் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் வதந்தி பரவியது.

இந்த நிலையில் தற்போது அப்படியே தலைகீழ் செய்தியாக அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் தான் வெங்கட் பிரபு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் ’மங்காத்தா’ படத்தின் ரெஃபரன்ஸ் காட்சி வருவதாகவும் அந்த காட்சியில் சிறப்பு தோற்றத்தில் வெங்கட் பிரபு நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியானால் தான் தெரியவரும் . இருப்பினும் இந்த தகவல் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment