அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு அக்டோபரில் இல்லை.. லேட்டஸ்ட் தகவல்..!

  • IndiaGlitz, [Monday,September 11 2023]

அஜித்தின் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதற்கு முன்பே தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது செப்டம்பர் இறுதி வாரத்தில் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் முதல் கட்ட படப்பிடிப்பு அபுதாபியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் 70% படப்பிடிப்பு வெளிநாட்டில் படமாக்கப்பட இருப்பதாகவும் மீதமுள்ள காட்சிகள் வட இந்தியா மற்றும் சென்னையில் படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது லொகேஷன் பார்க்கும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், படப்பிடிப்புக்கு தற்போது தயார் நிலையில் படக்குழுவினர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக கூறப்படுவது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை பிரமாண்டமாக லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இவர் ஒரு மாடர்ன் சாமியார்.. 'பாய்ஸ்' பட நடிகர் குறித்து விஜய்சேதுபதி..!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'பாய்ஸ்' படத்தில் நடித்த மணிகண்டன் நடிகர் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தில் நடித்துள்ள நிலையில் அவரை மேடைக்கு வரவழைத்து இவர் ஒரு மாடர்ன்

நான் பலிகடா ஆகிவிட்டேன்.. சென்னை இசை நிகழ்ச்சி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்..!

சென்னை இசை நிகழ்ச்சியில் நடந்த குழப்பம் குறித்து கருத்து தெரிவித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நான் பலிகடா ஆகிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்

This is cinema you fool.. கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' டீசர்..!

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், எஸ் ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில்

அதிவேக 100 மில்லியன் பார்வை.. ZEE5 தளத்தில் “டிடி ரிட்டர்ன்ஸ்”  படம் சாதனை !

ZEE5 தளத்தில் அதிவேக 100 மில்லியன் பார்வை நிமிடங்கள் கடந்து, “டிடி ரிட்டர்ன்ஸ்”  படம் சாதனை  செய்துள்ளது.

சென்னை இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பம்: ஏ.ஆர் ரஹ்மான் முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் நேற்று இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடந்த நிலையில் இந்த இசை நிகழ்ச்சிக்கு அளவுக்கு அதிகமாக டிக்கெட் வழங்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். 5000  ரூபாய் வரை