'விடாமுயற்சி' படப்பிடிப்பு.. அஜித் எடுத்த அதிரடி முடிவு..!

  • IndiaGlitz, [Thursday,November 09 2023]

அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் அஜித், த்ரிஷா உட்பட படக்குழுவினர் கலந்து கொள்கின்றனர்

இந்த் நிலையில் ’விடாமுயற்சி’ படக்குழுவினர் சென்னை வந்து தீபாவளி கொண்டாடி விட்டு அதன் பின்னர் மீண்டும் அஜர்பைஜான் சென்று படப்பை தொடர் வருவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அஜித் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அஜர்பைஜான் காட்சிகளை முடித்துவிட்டு தான் சென்னை செல்ல வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டதால் தீபாவளிக்கு பட குழுவினர் சென்னை திரும்பாமல் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்திக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல்தான் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பின் போதும் தீபாவளியை கொண்டாடாமல் படக்குழுவினர் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் எமோஷனல் காட்சிகள் கொண்ட இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

More News

இந்த ஐஷு எங்களுக்கு வேண்டாம், பழைய ஐஷு தான் வேணும்: அம்மாவின் எமோஷனல் பதிவு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஐஷு ஆரம்பத்தில் கலகலப்பான பெண்ணாக இருந்த நிலையில், நிக்சனுடன் நட்பு ஏற்பட்ட பின்னர் தான் பார்வையாளர்கள் அவருக்கு கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தனர். 

இந்த வார ஓடிடியில் த்ரிஷாவின் 'தி ரோடு' உள்பட 4 தமிழ்ப்படங்கள்: ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போல் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 

விசித்ரா மீது வழக்கு தொடுத்த பூர்ணிமா.. அர்ச்சனாவுக்கு ஏபிசிடி கூட தெரியாதா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று பிக் பாஸ் கோர்ட் காட்சிகள் நடைபெற இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் யார் மீது வேண்டுமானாலும் வழக்கு தொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பிராவோ பற்றி சொன்னது ஞாபகமில்லையா? ஐஷுவுக்கு குறும்படம் போட்ட நெட்டிசன்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாயா, பூர்ணிமா கேங் அத்துமீறி சக போட்டியாளர்களிடம் நடந்து கொண்டிருக்கின்றனர் என்பதை கடந்த சில நாட்களாக பார்த்து வருகிறோம். பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர்

சிம்புவின் அடுத்த படம் வெளியாக இன்னும் 2 ஆண்டுகள் ஆகுமா? ரசிகர்கள் அதிருப்தி.!

நடிகர் சிம்புவின் அடுத்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டு தான் வெளியாகும் என்று கூறப்படுவதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.