'விடாமுயற்சி' படப்பிடிப்பு.. அஜித் எடுத்த அதிரடி முடிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் அஜித், த்ரிஷா உட்பட படக்குழுவினர் கலந்து கொள்கின்றனர்
இந்த் நிலையில் ’விடாமுயற்சி’ படக்குழுவினர் சென்னை வந்து தீபாவளி கொண்டாடி விட்டு அதன் பின்னர் மீண்டும் அஜர்பைஜான் சென்று படப்பை தொடர் வருவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அஜித் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அஜர்பைஜான் காட்சிகளை முடித்துவிட்டு தான் சென்னை செல்ல வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டதால் தீபாவளிக்கு பட குழுவினர் சென்னை திரும்பாமல் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்திக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல்தான் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பின் போதும் தீபாவளியை கொண்டாடாமல் படக்குழுவினர் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் எமோஷனல் காட்சிகள் கொண்ட இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித், த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout